Skip to content

தமிழ்

மொழிபெயர்க்கப்பட வேண்டிய பிரதி

இலண்டன் மேயர் மற்றும் இலண்டன் அவைத் தேர்தல்கள் 2016 மே 5 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.

ஒப்பற்ற இந்த உள்ளாட்சி முறை இலண்டன் மற்றும் இலண்டன்வாழ் மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கிறது. மேயர், காவல் மற்றும் வீடமைப்புத்துறை முதல் சுழல் மற்றும் போக்குவரத்துத் துறை வரை கையாண்டு உங்கள் மாநகரத்தை  நிர்வகித்து வருகிறார். உங்கள் சார்பில் அவை மேயரைப் பொறுப்புடைமையுள்ளவராக ஆக்குகிறது.

யார் வாக்களிக்கலாம்

நீங்கள்:

  • 2016 மே 5 அன்று 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக
  • பிரித்தானிய, ஐரோப்பிய ஒன்றிய அல்லது தகுதியுள்ள பொதுநலவாயப் பிரஜையாக
  • இலண்டனில் வசிப்பவராக
  • 2016 ஏப்ரல் 18-இல் வாக்களிப்புக்குப் பதிவு செய்யப்பட்டவராக இருந்தால்

உங்களால்  www.gov.uk/register-to-vote எனும் இணையத்தளத்தில் அல்லது உங்கள் உள்ளாட்சிச் சபையுடன் தொடர்பு கொண்டு வாக்களிப்புக்குப் பதிவு செய்ய இயலும்.   

நீங்கள் யாருக்கு வாக்களிக்கலாம்

இந்தத் தேர்தல்களில் உங்களுக்கு மூன்று வாக்குகள் உள்ளன:

  • இலண்டன் மேயருக்கானது
  • இலண்டன் அவையில் முழு இலண்டனையும் பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் விரும்பும் ஆளுக்கானது
  • இலண்டன் அவையில் உங்கள் சொந்தப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் விரும்பும் ஆளுக்கானது

வாக்களிக்கும் வழிகள்

மூன்று வழிகளில் நீங்கள் வாக்களிக்கலாம்.

  • 2016 மே 5 அன்று உங்கள் வாக்குச் சாவடியில் முற்பகல் 7 மணி முதல் பிற்பகல் 10 மணி வரை
  • அஞ்சல் மூலம்
  • பதிலாள் ஒருவரைப் பயன்படுத்துவதன் மூலம்  இவர் நீங்கள் தெரிவு செய்யும் வேட்பாளருக்கு அல்லது கட்சிக்கு உங்கள் சார்பில் வாக்களிக்குமாறு உங்களால் கோரப்படும் ஆளாவார்.

வாக்குச் சீட்டுக்கள் ஆங்கிலத்தில் இருக்கும். இருப்பினும் வாக்குச் சாவடியில் தமிழில்  உங்களுக்கு வழிகாட்டுதல் கிடைக்கும். நீங்கள் விரும்பினால், உங்களுக்கு உதவவென ஆளொருவரை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் செல்லலாம். இதனைச் செய்வதற்கு வாக்குச் சாவடியில் பணியாற்றும் அலுவலர்களிடம் நீங்கள் அனுமதி பெறவேண்டும். உங்களுடன் வருபவர் நெருங்கிய குடும்ப உறுப்பினராக அல்லது இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதி உள்ள ஒருவராக இருக்கவேண்டும்.

நீங்கள் அஞ்சல் மூலம் அல்லது பதிலாள் மூலம் வாக்களிக்க விரும்பினால்,  உங்கள் உள்ளாட்சி சபைக்கு அதற்காக விண்ணப்பிக்கவேண்டும். அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 19 ஆகும்.  பதிலாள் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 26 ஆகும்.

மேலதிக தகவல்களைப் பெறுவதற்கு எங்கள் துண்டுப் பிரசுரத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.

Language

All languages