Skip to content

தமிழ்

3 மே 2012 அன்று லண்டன் மேயர் மற்றும் லண்டன் சட்ட மன்றம் ஆகியவற்றுக்கு வாக்களிக்க லண்டன் எங்கும் உள்ள மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

உங்களுடைய பிரதிநிதி யார் என்பதையும், உங்களுடைய தினசரி வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் – அதாவது பாதாள மற்றும் உள்ளூர் பேருந்துச் சேவைகள் மற்றும் காவல் பணிகள் ஆகியவற்றில் தொடங்கி பசுமையான பகுதிகள், காற்றின் தரம் மற்றும் டிராஃபால்கர் சதுக்கம் வரையிலானவற்றில் முடிவுகளை யார் எடுக்கப்போகிறார்கள் என்பதையும்  தேர்வு செய்ய இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது.

வாக்களிக்க  நீங்கள்:

  • 3 மே 2012 அன்று 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயது கொண்டவராக இருக்க வேன்டும்
  • பிரிட்டிஷ் அல்லது காமென்வெல்த் அல்லது ஐரோப்பிய கூட்டமைப்பின் ஒரு குடிமகனாக இருக்க வேண்டும்
  • லண்டனில் வசித்துக் கொண்டிருக்க வேண்டும்
  • வாக்களிக்க பதிவு செய்து கொண்டிருக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் உங்களுக்கு மூன்று வாக்குகள் இருக்கும்:

  • லண்டன் மேயருக்கு ஒரு வாக்கு
  • உங்களுடைய உள்ளூர்ப் பகுதியைப் பிரதிநிதித்துவம் செய்யப்போகும் நபருக்கு ஒரு வாக்கு
  • ஒட்டு மொத்த லண்டனை பிரதிநிதித்துவம் செய்யப்போகும் மக்களுக்காக ஒரு வாக்கு.

நீங்கள் வாக்களிக்கச் செல்லும் போது உங்களுக்கு மூன்று வாக்குச்சீட்டுகள் அளிக்கப்படும்.

இந்தத் தேர்தல் குறித்தும், எங்கே வாக்களிப்பது, எப்போது வாக்களிப்பது மற்றும் உங்களுடைய வாக்குச் சீட்டுகளை எப்படி பூர்த்தி செய்வது என்பது குறித்தும் மேலும் அறிந்து கொள்ள தயவு செய்து ஜனவரி 2012 அன்று இந்த இணையதளத்தை மீண்டும் பார்வையிடவும். நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் விவரித்துக் கூறும் உங்களுடைய மொழியில் அமைந்த துண்டுப்பிரசுரங்களும், கையேடுகளும் உங்களுக்கு கிடைக்கப்பெறுமாறு நாங்கள் வைத்திருப்போம்.   

இந்தத் தேர்தல் குறித்தும், எங்கே வாக்களிப்பது, எப்போது வாக்களிப்பது மற்றும் உங்களுடைய மூன்று வாக்குச்சீட்டுகளை எப்படி பூர்த்தி செய்வது என்பது குறித்தும் மேலும் அறிந்து கொள்ள தமிழ் மொழியில் அமைந்துள்ள எங்களுடைய துண்டுப் பிரசுரத்தைக் கீழே பதிவிறக்கம் செய்து கொள்ளவும். தேர்தலில்  வாக்குகளை அளிப்பது குறித்து நீங்கள் மற்றவர்களுக்குக் கூற விரும்பினால் அதற்கான தமிழ் மொழியில் அமைந்த சுவரொட்டிகளும் அங்கு உள்ளன.

அனைத்து வாக்குச்சீட்டுகளும் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதையும், வாக்குச் சாவடிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வாக்குச்சீட்டுகள்  கிடைக்கப்பெறாது என்பதையும் தயவு செய்து குறித்துக் கொள்ளவும். உங்களுடைய சொந்த விருப்பத் தேர்வுகளின் அடிப்படையில் உங்களுடைய வாக்குச்சீட்டை நீங்களே பூர்த்தி செய்ய வேண்டும் என்ற போதிலும், நீங்கள் விரும்பினால்  உதவிக்காக யாரேனும் ஒருவரை வாக்குச்சாவடிக்கு உங்களுடன் கூட்டிச் செல்லலாம்.

உங்களுடைய வாக்கை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து உங்களுக்கு தகவல் தேவைப்பட்டால், தயவு செய்து www.aboutmyvote.co.uk என்னும்  இணையதளத்தைப் பார்வையிடவும்.

உங்களுடைய வாக்குகளை அளியுங்கள். மே 3 ஆம் தேதி வாக்களியுங்கள்.

Language

All languages